

திருவனந்தபுரம்: கேரள போலீஸார் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கேரளாவின் பீச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றகாரை வழிமறித்து கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. 3 எஸ்யுவி கார்களில் பின் தொடர்ந்து வந்த 12 பேர் கொண்ட கும்பல் முன்னால் சென்ற காரை வழிமறித்து அதிலிருந்த இரண்டு ஆண்களை கடத்தியதுடன், ரூ.1.80 கோடி மதிப்புள்ள 2.5 கிலோ தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளது. அதன்பிறகு அந்த இருவரையும் அந்த கும்பல் விடுவித்துவிட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் காரின் டேஸ்போர்டில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.