மதுரையில் திமுக கொடிக் கம்பியை அகற்றும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் மரணம்

மதுரையில் திமுக கொடிக் கம்பியை அகற்றும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் மரணம்
Updated on
1 min read

மதுரை: பாசிங்காபுரத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து கொடிக் கம்பிகளை அகற்றும்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களை வரவேற்க அப்பகுதியில் திமுக கட்சி கொடிகள் இரும்பு கம்பிகளில் நடப்பட்டன

இந்நிலையில் கூட்டம் முடிவடைந்து மாலை கொடி கம்பிகளை அகற்றும் பணியில் சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்த பழனி என்பவர் மகன் நவீன்குமார் (18) என்ற கல்லூரி மாணவரும் ஈடுபட்டிந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கொடிக்கம்பியில் மின்வயர் உரசியதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in