Published : 07 Aug 2024 04:45 AM
Last Updated : 07 Aug 2024 04:45 AM

முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி முகநூல் கணக்கு: மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக இருப்பவர் டிஐஜி திருநாவுக்கரசு. ஐபிஎஸ் அதிகாரியான இவரது பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கை தொடங்கிய சைபர் மோசடி கும்பல், அவரது நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் பணம் பறித்தனர்.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மோசடி கும்பல், ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசுவின் நட்பு பட்டியலில்இருந்த பலரிடமும், அதிகாரி திருநாவுக்கரசின் நண்பர் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி இருப்பதாகவும் அவர் சென்னையில் இருந்து இடமாறுதல் ஆவதால் அவர் வீட்டில் பயன்படுத்திய விலை உயர்ந்த பர்னிச்சர் பொருட்களை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து ஐபி முகவரியை அடிப்படையாக வைத்து ராஜஸ்தான் சென்றனர். அங்குபதுங்கி இருந்த அம்மாநிலத்தைச் சேர்ந்த ஹனிஃப் கான், வாஷித் கான் ஆகியோரைக் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x