சென்னை | மைசூரு இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் கைது

சென்னை | மைசூரு இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் கைது

Published on

சென்னை: கர்நாடகா மாநிலம், மைசூருவில் வசிக்கும் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர்கணவரை பிரித்து தனியாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை அடுத்த ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்த இரு பெண்களுடன் நட்பு ஏற்பட்டது. இவர்களை சந்திக்க அந்த இளம் பெண்கடந்த 16-ம் தேதி சென்னை வந்தார்.

அவர்களை சந்தித்துவிட்டு பின்னர், சொந்த மாநிலம் செல்ல நேற்று முன்தினம் (18-ம் தேதி) மாலை 5.30 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையம்வந்தார். அங்கு மைசூரு செல்ல நின்றிருந்தபோது, லாரி ஓட்டுநரான காவேரிப்பாக்கம், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் (32) என்பவர் அந்தஇளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த இளம் பெண் தான் கணவரை பிரிந்தவர் என்றும், தற்போது குடும்பம் நடத்த கஷ்டப்படுவதாகவும், எனவே தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா என சதீஷ்குமாரை கேட்டுள்ளார்.

இதையடுத்து, தனக்கு தெரிந்தநபர்கள் சென்னையில் சிலர் உள்ளதாகவும், அவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி அந்த இளம்பெண்ணை பாலியல் புரோக்கரான மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஷகிலா (33) என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மேலும் ஒருவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், அன்று இரவு சதீஷ் குமார் உட்பட 3 பேர் அங்கேயே மது அருந்தி உள்ளனர். மேலும், அவர்கள் ஏற்கெனவே அழைத்து வரப்பட்ட மைசூரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டனராம். இதை அறிந்து அந்த இளம்பெண் அதிர்ச்சிஅடைந்தார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த சதீஷ்குமார் அந்த பெண்ணைபாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அவர் அங்கேயே தூங்கிய நிலையில் அவரது போனிலிருந்து காவல்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மைசூரு இளம்பெண், தன்னைகாப்பாற்றும்படி கூறி கதறி உள்ளார். ஆனால், தான் எந்த பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறோம் என அவருக்கு சொல்ல தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலைய போலீஸார் செல்போன் டவர்லெக்கேஷன் மூலம் மைசூரு பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்த மடிப்பாக்கம் சென்று அவரை மீட்டனர். தொடர்ந்து சதீஷ் குமார், ஷகிலா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in