

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (52). கொடுங்கையூரில் உள்ளகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர்நேற்று முன்தினம் பிற்பகல் பணியில் இருந்தபோது அங்கு வந்த5 பேர் கத்திமுனையில் மிரட்டி பாலகிருஷ்ணனிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவஇடம்மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி களைக்கைப்பற்றி ஆராய்ந்ததில், வழிப்பறியில்ஈடுபட்டது கொடுங்கையூர் மனோஜ் என்ற கவுதம் (20), அதே பகுதி மணிகண்டன் (25), விஜய்(22), பிரேம் குமார் (28)ஜெகன் (42) ஆகிய 5 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ் மீது ஏற்கெனவே 17 வழிப்பறி வழக்குகளும், மணிகண்டன் மீது3 வழிப்பறி வழக்குகளும், விஜய் மீது ஒருவழக்கும் உள்ளதாக போலீஸார் கூறினர்.