மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 12 பேர் பிஹாரில் கைது

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 12 பேர் பிஹாரில் கைது
Updated on
1 min read

தர்பங்கா: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளுக்கான தகுதித் தேர்வு (சிடெட்) நேற்று முன்தினம் நடைபெற்றது. பிஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள சில தேர்வு மையங்களில், விண்ணப்பதாரர்கள் சார்பில் வேறு சிலர் (ஆள்மாறாட்டம்) தேர்வு எழுதியதாக கண்காணிப்பாளர்கள் புகார் செய்தனர்.

இதுகுறித்து தர்பங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜகுநாத் ரெட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “விண்ணப் பதாரர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவை ஆய்வு செய்ததில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மற்றவர்களுக்காக தேர்வு எழுதிய 2 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

நீட் சர்ச்சை: இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில்வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கவுன்சலிங் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர் கள், பெற்றோர்கள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், சிடெட் தேர்விலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in