காஞ்சிபுரம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் கைது

பாதிரியார் தேவஇரக்கம்
பாதிரியார் தேவஇரக்கம்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஒருவரை மகளிர் காவல் நிலைய போலீஸார் இன்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலை, சி.எஸ்.ஐ தேவாலயத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் தேவஇரக்கம் (54). இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பி ஓடி வந்த அந்தச் சிறுமி, நடந்த சம்பவத்தை தனது பகுதி மக்களிடம் விவரித்துள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

அதனால் அந்தப் பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்தனர். அந்த மனு காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவ்யா, காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரணை செய்த போலீஸார், பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று அவரைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in