

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசல் ரெட்டைவார்காரத் தெருவைச் சேர்ந்தவர் பழ.சந்தோஷ்குமார்(29). இந்து எழுச்சிப் பேரவை என்ற அமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளார். இவர், தனது முகநூல் மற்றும் எக்ஸ் வலைதள பக்கங்களில், திமுக அரசு 200 கோயில்களை இடித்துவிட்டதாகப் பதிவிட்டுள்ளார் என்று தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில், திமுக அயலக அணி அமைப்பாளர் லெனின் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், பழ.சந்தோஷ்குமாரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.