தாம்பரம் அருகே போதை பொருள் விற்பனை: தொழில் போட்டியால் 2 பேர் கொலை

அண்ணாமலை, தமிழரசன்
அண்ணாமலை, தமிழரசன்
Updated on
1 min read

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பெருங்களத்தூரில், போதைப் பொருள் விற்பனை தொழிலில் ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பேர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர்.

பெருங்களத்தூரைச் சேர்ந்த அண்ணாமலை(23), ஜில்லா (எ)தமிழரசன்(23), சோனு (எ) கோபாலகிருஷ்ணன் (23) ஆகியோர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தொழில் போட்டி காரணமாக அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோனுவை கொலை செய்து விடுவதாக அவரது மனைவியிடம் அண்ணாமலை மிரட்டிஉள்ளார். இதையறிந்த சோனு, பெருங்களத்தூர் விவேக் நகருக்குஅண்ணாமலை, தமிழரசனை வரவழைத்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் குண்டுமேடு இடுகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே சோனுவின் நண்பர்கள் இருந்துள்ளனர்.

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சோனுவும், அவரது நண்பர்களும் சேர்ந்து, அண்ணாமலை, தமிழரசனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர்ஹரி, பீர்க்கங்கரணை போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸார் அங்கு சென்று அண்ணாமலை, தமிழரசன் சடலத்தை மீட்டு, பிரேதப் பிரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர் விசாரணையில், சோனுவுடன் சேர்ந்து, கோபாலகிருஷ்ணன், ஆரிப், மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளிட்ட 5பேர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும், குண்டுமேடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பான தொழில் போட்டியால் அண்ணாமலை, தமிழரசனைக் கொன்றதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள சோனு, கோபாலகிருஷ்ணன், ஆரிப் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in