வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் @ தூத்துக்குடி

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட  போதை பொருள்
தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த, ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருளைக் கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒருவீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில், 8 பாலித்தீன் பாக்கெட்களில், தலா ஒரு கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவை 'ஐஸ்' என்று அழைக்கப்படும் 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என்ற உயர்ரக போதைப் பொருள் என்பதும் தெரியவந்தது. சுமார் 60 சதவீதம் தூய்மையான இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடியாகும்.

இதையடுத்து, வீட்டில் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த நிர்மல்ராஜ் (29), அவரது மனைவி சிபானி(28) ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் ரூ.24 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in