

உடுமலை: உடுமலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் கைதாகி, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயகாளீஸ்வன், மதன்குமார், பரணிகுமார், யுவபிரகாஷ், நந்தகோபால், பவா பாரதி ஆகிய 6பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தவிட்டுள்ளார்.