சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: பெண் விடுதி காப்பாளர் போக்சோவில் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: பெண் விடுதி காப்பாளர் போக்சோவில் கைது
Updated on
1 min read

போடி: தேனி மாவட்டம் போடி அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

போடி அருகேயுள்ள குழந்தைகள் காப்பகத்தில், 10 வயது சிறு வனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், காப்பக நிர்வாகி முனீஸ்வரி(28) என்பவர் அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து, காப்பக நிர்வாகி முனீஸ்வரியை போடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முனீஸ்வரி, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in