பூந்தமல்லி | மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி கைது: நசரத்பேட்டை போலீஸார் நடவடிக்கை

பூந்தமல்லி | மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி கைது: நசரத்பேட்டை போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத் பேட்டையில் மதுபோதையில் தகராறு செய்த கணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை யமுனா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(35). தனியார் மார்க்கெட்டிங் நிறுவன ஊழியரான இவரது மனைவி மங்களலட்சுமி பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இத்தம்பதிக்கு தஸ்வந்த் என்ற மகன் உள்ளார்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட சீனிவாசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் வீண் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 1-ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசன், மங்களலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த மங்களலட்சுமி, வீட்டில் இருந்தகாய்கறி நறுக்கும் கத்தியால்குத்தியதில், வயிற்றில் படுகாயமடைந்த சீனிவாசன், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து, அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில்,நேற்று சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை வழக்காக மாற்றம்: இதையடுத்து, நசரத்பேட்டை போலீஸார், சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்கள், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி, மங்களலட்சுமியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in