Published : 01 Jun 2024 05:50 AM
Last Updated : 01 Jun 2024 05:50 AM
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (49). இவர், அவரது உறவினரான கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் வீடு கட்டுவதற்காக இடம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பேரில் கோபாலகிருஷ்ணன், தனக்குதெரிந்த ரகு, அவரது மனைவி தேவி, இளங்கோ ஆகியோருடன் சேர்ந்து கொரட்டூர், மதனாங்குப்பத்தில் உள்ளகாந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான ஓர் இடத்தை வாங்குவதற்காக விலை பேசியுள்ளார்.
அதன்பேரில் மாலதி கடந்த 24.09.2021 அன்று முன் பணமாக ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும், பத்திரப்பதிவு செய்வதற்காக முகமது அனிபா என்பவருக்கும் தனியாக ரூ.2.30 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் பத்திரப்பதிவு செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.மேலும், பெற்ற பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை; மாறாக மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாலதி இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து புகாருக்குள்ளான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த இளங்கோ (42), அதே பகுதி கோபாலகிருஷ்ணன் (58), சென்னை அண்ணாநகர் மேற்கு முகமது அனிபா (55) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT