சென்னை | கள்ள சந்தையில் அதிக விலைக்கு ஐபிஎல் டிக்கெட்களை விற்பனை செய்த 8 பேர் கைது

சென்னை | கள்ள சந்தையில் அதிக விலைக்கு ஐபிஎல் டிக்கெட்களை விற்பனை செய்த 8 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்த 8 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 36 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதையொட்டி திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனைசெய்த பெரம்பூரை சேர்ந்த இம்தியாஸ் அகமது (43), ராயபுரம் ஜதின்(26), வேளச்சேரி கார்த்திகேயன் (30), பல்லாவரம் பிரணாய் (18) மேற்கு வங்கத்தை சேர்ந்த நிலாத்ரி சேகர் மொண்டல் (22), கர்நாடகாவை சேர்ந்த சிவானந்தகவுடா (21), ஆந்திராவை சேர்ந்த வெங்கட்ராமன் (45) மற்றும் பலகிரிசையது பாஷா (32) ஆகிய 8 பேரைபோலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.42 லட்சம் மதிப்புள்ள 36 ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in