தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே 3 சக்கர சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே நேரிட்ட விபத்தில் சேதமடைந்த கார் மற்றும் 3 சக்கர சைக்கிள்.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே நேரிட்ட விபத்தில் சேதமடைந்த கார் மற்றும் 3 சக்கர சைக்கிள்.
Updated on
1 min read

கோவில்பட்டி: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர், ஊர் ஊராகச் சென்று 3 சக்கர சைக்கிளில் பழைய பேப்பர், அட்டை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, அவற்றை தூத்துக்குடியில் உள்ள கடையில் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், சிலம்பரசன், அவரது மனைவி தங்கம்மாள்(35), தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (60), முருகன் மகன் சதீஷ் (7) உள்ளிட்ட 6 பேர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே கீழசண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டைகளை சேகரித்தனர்.

பின்னர் அங்கிருந்து 3 சக்கர சைக்கிளை தள்ளியபடி கிழக்கு கடற்கரை சாலையைக் கடந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சதீஷ், தங்கம்மாள், மாரியம்மாள் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த சிலம்பரசன் மற்றும் காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குலவேளையைச் சேர்ந்த செல்வராஜ் (55), அவரது மனைவி குமரி தங்கம் (49) ஆகியோர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து சூரங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in