காஞ்சிபுரம் | நடிகை கவுதமி, சகோதரர் நிலம் மோசடியாக விற்பனை
காஞ்சிபுரம்: நடிகை கவுதமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் 2 புகார்களை அளித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூரில் உள்ள ரூ.1.07 கோடிமதிப்புள்ள தனது நிலத்தை கவனத்துக் கொள்வதாக பவர் அதிகாரம் பெற்று ரூ.60 லட்சத்துக்கு மோசடியாக விற்பனை செய்ததுடன் அதற்கான தொகையையும் தனக்கு கொடுக்கவில்லை என்று கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் அழகப்பன், பலராமன் ஆகிய 2 பேர்மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கவுதமியின் சகோதரர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் அழகப்பன் தனி அதிகாரம் பெற்று ரூ.60 லட்சத்துக்கு விற்றுள்ளார். பின்னர் இதனை சில மாதங்கள் கழித்துரூ.1 கோடிக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளனர். மோசடியாக விற்பனை செய்ததுடன், அந்தத்தொகையையும் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை. இது தொடர்பாக கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன், சுகுமார், ரகுநாதன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
