பூந்தமல்லி | 18 ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

பிரகாஷ்
பிரகாஷ்
Updated on
1 min read

பூந்தமல்லி: சென்னை, போரூரில் கொலை முயற்சி வழக்கில் 18 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருபவரை தேடப்படும் குற்றவாளியாக பூந்தமல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை, போரூர் பகுதியைச்சேர்ந்தவர் பிரகாஷ்(21). இவர்,கடந்த 2006-ம் ஆண்டு கொலைசெய்ய முயற்சி வழக்கு தொடர்பாக போரூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த பிரகாஷ், இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து, பிரகாஷுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையிலும், அவர் போலீஸாரிடம் சிக்காமல் 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷை தேடப்படும் குற்றவாளியாக நேற்று முன்தினம் பூந்தமல்லி நீதிமன்றம் அறிவித்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in