கல்பாக்கம் | சிஐஎஸ்எப் வீரர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ரவி கிரண்
ரவி கிரண்
Updated on
1 min read

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திரா காந்திஅணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரவி கிரண் (37).

பணி முடித்து சக வீரர்களுடன் பேருந்தில் தலைமை அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலை மீட்ட சதுரங்கப்பட்டினம் போலீஸார், செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில்,முதற்கட்ட விசாரணையில்ரவிகிரண் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும், சிஐஎஸ்எப் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக துறை சார்ந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை முடித்து சிஐஎஸ்எப் அதிகாரிகளிடம் அவரது உடல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கமாண்டன்ட் விஷ்ணுசொருப் முன்னிலையில், உயிரிழந்த ரவிகிரண் உடலுக்கு சக சிஐஎஸ்எப் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in