சென்னையில் 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்: உரிமையாளர் மீது வழக்கு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை‌ வளர்ப்பு நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவத்தில் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அருண்குமார். இவரது மனைவி தேன்மொழி ( 31). இவர்களது 6 வயது மகன் ஹரிஷ்குமார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஸ்டெல்லா (50). இவர் தனது வீட்டில் சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், சிறுவன் ஹரிஷ்குமார் இன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது ஸ்டெல்லாவின் 10 வயது மகன் நாயை வெளியே அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவன் ஹரீஷ் குமாரை பார்த்து குரைத்தத நாய், சிறுவனை கடித்துக் குதறியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த சிறுவனை மீட்ட அவனது பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நாய் உரிமையாளரான ஸ்டெல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த சில தினங்களாகவே ஆயிரம் விளக்கு, ஆதம்பாக்கம், சூளைமேடு, ஆலம்பாக்கம்‌ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய் கடித்துவரும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. இந்த நிலையில், புளியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in