

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த பெரும்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் லிங்கமுகிலன், சிவா ஆகியோர் கடந்த 6-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 9-வது தெரு வழியாக ரோந்து சென்றபோது, அங்குள்ள முட்புதரில் 6 பேர்நாட்டு வெடி மற்றும் 2 கத்தி களுடன் நின்றிருந்ததாக கூறப்படு கிறது.
தப்பியோடினர்: இதையடுத்து, காவலர்கள் இருவரும் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றதாகவும். ஆனால், காவலர்களிடம் பிடிபடாமல் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. பின்னர், இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தப்பியோடிய நபர்கள் அதேபகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளுவர் நகர், 4-வது தெருவை சேர்ந்த யுவராஜ் (22), அதே தெருவை சேர்ந்த சிறுவன் மற்றும் இந்திரா நகரை சேர்ந்த சரண்ராஜ்(22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், மூன்று பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்ற இருவரையும் சிறையிலும் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கவின், யோகேஸ்வரன், ஜேசுராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.