வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை திருட்டு @ நாகூர்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் நூல்கடை தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி மனைவி தாவூத் பாத்திமா நாச்சியார்(62). இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகளும், மகனும் வெளிநாட்டில் உள்ளனர். முகமது அலி இறந்துவிட்ட நிலையில், தாவூத் பாத்திமாநாச்சியார், தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

கடந்த மே 3-ம் தேதி நாகூர் புதுமனைத் தெருவில் உள்ள தனதுதம்பி வீட்டுக்கு தாவூத் பாத்திமாசென்றிருந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டுக்கு தாவூத்பாத்திமாவின் மற்றொரு தம்பிசென்றபோது வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப் பது தெரியவந்தது. இது குறித்துதகவலறிந்த தாவூத் பாத்திமா,வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அறைகளில் 5 பீரோக்களில் இருந்த 110 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்றுபார்வையிட்டனர். பின்னர், நாகூர்போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in