5-ம் தேதி வரையிலான 7 நாட்களில் சென்னையில் 31 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

5-ம் தேதி வரையிலான 7 நாட்களில் சென்னையில் 31 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் குற்றங்களை முற்றிலும் குறைக்க காவல் துறைபல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இந்த மாதம் 5-ம் தேதி வரை454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 222 பேரும், திருட்டு,வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 77 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 112 பேரும், போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10 பேரும்,பெண்களை மானபங்கப்படுத்தியதாக 4 பேரும், சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக 3 பேரும், மதுபானம்விற்றதாக 3 பேரும், பொது விநியோகப் பொருள் கடத்தியதாக ஒருவரும் என மொத்தம் 454 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 29-ம் தேதியிலிருந்து இந்த மாதம் 5-ம் தேதிவரையிலான 7 நாட்களில் 31 பேர்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்குப்பங்கம் விளைவிக்கும் நபர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in