

மதுரை: துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.49.34 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நாகை இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம்வந்தது. இதில் வந்த நாகபட்டினத்தைச் சேர்ந்த அப்துல் ஹசன் மகன் முகமது அபூபக்கர் சித்திக்(33) என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.
அவர் 812 கிராம் எடை கொண்ட, ரூ.49,34,220 மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் முகமது அபூபக்கர் சித்திக்கை கைது செய்து, அவரிடமிருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.