

கோவை: கன்னியாகுமாி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்தவர் பபிஷா ( 18 ). இவர், கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் மாணவி பபிஷா விடுதி அறையில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், அறையிலிருந்து வெளியே சென்ற பபிஷா, விடுதியின் 3-வது மாடியிலிருந்து திடீரென கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பபிஷா நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.