Published : 03 May 2024 06:20 AM
Last Updated : 03 May 2024 06:20 AM
சென்னை: இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக ராஜஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் பெண் ஒருவர் சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார்ஒன்று அளித்தார். அதில்,``கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் இளைஞர் ஒருவரது நட்பு கிடைத்தது. அவருடன் நெருங்கி பழகினேன். வீடியோ காலிலும் பேசி னோம். அப்போது, அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொண்டோம்.
இந்நிலையில், அவர்அந்த புகைப்படங்களை காண்பித்து ரூ.10 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். நான் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அந்தபுகைப் படங்களை எனது கணவருக்கு அனுப்பிவிட்டார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்துஅவரிடம் உள்ள எனது அந்தரங்க புகைப் படங்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றது ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த பரூக் அலி (34) என்பதுதெரியவந்தது.
இதையடுத்து கோடம்பாக்கம் காவல் நிலையஆய்வாளர் பெருந்துறை முருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்று அங்கு பதுங்கிஇருந்த பரூக் அலியை கைது செய்தனர்.
பின்னர், ஜுசுன்னு மாவட்டத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சென்னை அழைத்து வந்தனர். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT