

போபால்: போபால் தனியார் பள்ளி விடுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து போபால் நகரின் மிஸ்ராத் காவல் நிலைய அதிகாரி மணீஷ் ராஜ் பதோரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தனியார் பள்ளி மாணவிகள் விடுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் 3 பேருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கு பதிவு செய்துள்ளோம். அச்சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது. ஆதாரங்களை சேகரிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் கொடுத்து அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என கேட்கிறீர்கள். விசாரணைக்கு பிறகே அது தெரியவரும்.
சம்பவம் நடந்த நாள் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியுள்ளோம். குற்றவாளிகளின் அடையாளம் காணப்பட்டவுடன் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு காவல் நிலைய அதிகாரி கூறினார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த முதல்வர் மோகன் யாதவ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.