Published : 01 May 2024 05:35 AM
Last Updated : 01 May 2024 05:35 AM
சென்னை: சென்னையில் போதைப் பொருள்கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூலம் கடந்த 23 முதல் 29-ம் தேதி வரையிலான 7 நாட்கள் நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் 2021-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், போதைப் பொருட்கள் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்ட 1,243 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,423 குற்றவாளிகளின் சொத்து, வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்ட ரீதியாக முடக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த29 வரை 4 மாதங்களில் கஞ்சாஉள்ளிட்ட போதைப் பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 107பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT