பொன்மார் | மனைவியை கொலை செய்த பாதிரியார் கைது

வைஷாலி, விமல்ராஜ்
வைஷாலி, விமல்ராஜ்
Updated on
1 min read

பொன்மார்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (35). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வைஷாலி (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக அவர் பொறுப்பேற்று இங்கு குடியேறினார் இதனிடையே கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, மேடவாக்கம் அருகே ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த விமல் ராஜ் தனது மனைவி வைஷாலி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும் அதனால் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் கூறினார். இதை நம்பிய அவரது பெற்றோர் உடலை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் மாலை ஒட்டியம்பாக்கத்துக்கு வந்த வைஷாலி பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால் குமார், வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாழம்பூர் போலீஸில் விஷால் குமார் புகார் அளித்தார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸாரிடம், திருமணம் ஆனதி லிருந்து தங்களுக்குள் தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் நேற்றுமுன்தினம் தகராறு முற்றியதில் அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்ததாகவும், கொலையை மறைத்து உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதாகவும் பாதிரியார் விமல் ராஜ் தெரிவித்தார். இதனையடுத்து விமல்ராஜ் கைது செய்யப் பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in