ராஜஸ்தான் மசூதியில் மவுலவி அடித்துக் கொலை

மவுலவி முகம்மது மாஹிர்
மவுலவி முகம்மது மாஹிர்
Updated on
1 min read

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரின் காஞ்சன் நகரில் முகம்மதி மதீனா மசூதி உள்ளது. இங்கு 15 மாணவர்கள் படிக்கும் மதரஸாவும் உள்ளது. இங்குள்ள முகம்மது மாஹிர் என்ற மவுலவி தங்கியிருந்தார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மசூதியின் பின்பக்க வாயில் வழியாக முகமூடி அணிந்த 3 பேர் உள்ளே புகுந்து மாஹிரை தடியால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பினர்.

இதுகுறித்து ராம்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி ரவீந்திர கின்ச்சி கூறும்போது, “மவுலவி முகம்மது மாஹிர் கொலையில் முகமூடி அணிந்திருந்த 3 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என்றார். மவுலவி முகம்மது மாஹிர் உ.பி.யின் ராம்பூரை சேர்ந்தவர். 7 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்துள்ளார்.

அவரது சகோதரர் முகம்மது அமீர் கூறும்போது, “மதரஸாவை மாஹிர் கையாளுவதை அப்பகுதியில் உள்ள சிலர் விரும்பவில்லை. அவர்கள் மதரஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பினர். கொலை தொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in