சென்னை விமான நிலைய கழிப்பறை குப்பை தொட்டியிலிருந்த ரூ.90 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கழிப்பறை குப்பை தொட்டியிலிருந்த ரூ.90 லட்சம் தங்கம் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலைய கழிப்பறை குப்பை தொட்டியில் இருந்த ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகைப் பகுதியில் உள்ள கழிப்பறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்த பார்சலை பார்த்த ஊழியர்கள், விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன், அந்த பார்சலில் வெடிகுண்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அதிகாரிகள், பார்சலை பிரித்து பார்த்த போது 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட 4 தங்கக்கட்டிகள் இருந்தன.

இதையடுத்து, ரூ.90 லட்சம்மதிப்புள்ள அந்த தங்கக்கட்டிகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததுயார் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in