

மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில், அதன் துணை நிறுவன இயக்குநர்கள் 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதுகுறித்த புகாரின்பேரில் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில், ரூ.260 கோடி அளவுக்குமோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நியோமேக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 30-க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர், நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்து, வழக்கில் தலைமறைவானவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குநர்கள் சார்லஸ்(50), இளையராஜா(38), ராஜ்குமார்(46), சஞ்சீவ்குமார் (46) ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். நியோமேக்ஸ் நிறுவனம் தொடங்கியதில் இருந்தே சார்லஸ் முக்கியநபராகச் செயல்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.