

சென்னை: மகாகவி பாரதியார் நகரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை எம்.கே.பி. நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூட்ஷெட் ரோடு உட்புற பகுதியில் உள்ள மறைவான இடத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்தபோலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சென்னை மாத்தூரைச் சேர்ந்த நவீன்குமார் என்ற அப்பு(27) என்பதும், எம்கேபி நகர்காவல் நிலைய ரவுடி பட்டியலில்பெயர் இருப்பதும் தெரியவந்தது. கொலை தொடர்பாக வியாசர் பாடி 1-வது தெரு குமரேசன் (38),அதேபகுதி எம்.எம்.நகர் அங்கப்பன் (30), தமீம் அன்சாரி (32) ஆகிய3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.கொலைக்கான காரணம்கொலை செய்யப்பட்ட நவீன்குமார் தனது நண்பரான குமரேசனுடன் சேர்ந்துஅடிக்கடி மது அருந்தி வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நவீன்குமார், குமரேசனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த நவீன்குமார் குமரேசனின் மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமரேசன், கடந்த 22-ம் தேதி இரவு தனது நண்பர்களான அங்கப்பன் மற்றும் தமீம் அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து, மது அருந்த அழைத்து நவீன்குமாரை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.