உ.பி. காவலர் தேர்வில் முறைகேடு: இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்

உ.பி. காவலர் தேர்வில் முறைகேடு: இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்
Updated on
1 min read

சென்னை: உத்தர பிரதேச மாநில காவலர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், சென்னையில் பணியாற்றி வந்த மத்திய அரசு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் உள்ளது.

இங்கு உதவி பொது மேலாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்தவிஜய் கன்னோஜியா (30) என்பவர் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கடந்தபிப்ரவரி 17-ம் தேதி நடக்க இருந்த காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு போலியாக தயாரிக்கப்பட்டு, விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், சென்னையில் உள்ள இந்திய உணவு கழக அலுவலகஉதவி பொது மேலாளரான விஜய் கன்னோஜியா முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 22-ம் தேதி இரவுசென்னை வந்த அம்மாநில போலீஸார், சென்னை ஆயிரம்விளக்கு போலீஸார் உதவியுடன், சூளைமேட்டில் தங்கி இருந்தவிஜய் கன்னோஜியாவை கைது செய்தனர். அவரை எழும்பூர்நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, பின்னர் விசாரணைக்காக உத்தர பிரதேசத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in