

மதுரை: மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித்பிஸ்வாஷ் (40). வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், ஒத்தக்கடை -மேலூர் பிரதான சாலையில் உள்ள மிராஸ் நகரில் கிளினிக்நடத்தி, அலோபதி சிகிச்சை அளித்து வந்தார்.
இந்நிலையில், மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள் அபிஜித் பிஸ்வாஷ்கிளினிக்கில் சோதனை செய்தனர். அவர் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அபிஜித் விஸ்வாஷை கைது செய்த போலீஸார், அவரது கிளினிக்கில்இருந்து மருந்து. மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.