

திருப்பூர்: திருப்பூரில் 2019-ல் 13 வயதுபள்ளி மாணவி, தொழிலாளிஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். இந்தவழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், தனது சித்தப்பா கூறியதால், தொழிலாளி மீது பொய் புகார் கொடுத்ததாக நீதிமன்றத்தில் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து, சிறுமியின்சித்தப்பாவான போயம்பாளையம் சங்கர் (38) மீது, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குத் தொடுத்து, விசாரித்தது.
இந்த வழக்கில், சங்கருக்கு4 மாதங்கள் சிறை தண்டனை,ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி உத்தரவிட்டார். பின்னர் சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜரானார்.