Published : 15 Apr 2024 06:10 AM
Last Updated : 15 Apr 2024 06:10 AM

சென்னை | காரில் சென்ற பெண்ணை தாக்கியதாக ரவுடி உட்பட 2 பேர் கைது

சென்னை: காரில் சென்ற பெண் மீது தாக்குதல் நடத்தியதாக ரவுடி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாதவரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தீனா (33). இவர், தனது தம்பி ஹரிபாபு, 2-வது தம்பியின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருடன் மாதவரம் பொன்னியம்மன் மேடு நடசக்தி கடம்பாவு அம்மன் கோயில் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த 2 பேர், தீனாவின் காருக்கு வழிவிடாமல் மறித்து நின்றனர். இதுகுறித்து கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.

சரமாரியாக தாக்குதல்: ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், தீனா உள்பட காரில் இருந்த 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். காரையும் சேதப்படுத்தினர். அத்துடன், காரிலிருந்த ஐஸ்வர்யாவை பாலியல் ரீதியில் சீண்டியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தீனா, இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

சரித்திரப் பதிவேடு குற்றவாளி: இதில், தீனாவிடம் தகராறு செய்துவிட்டு தப்பியது மாதவரத்தைச் சேர்ந்த வினோத் (28), விக்னேஷ் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வினோத், மாதவரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 அடிதடி மற்றும் 3 வழிப்பறி வழக்குகள் உட்பட 5 வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x