

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள புஷ்பத்தூரை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர்.
இவர் கடந்த 8-ம் தேதி சாமிநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மது போதையில் சென்றதாகவும், அங்கிருந்த காலை உணவுத் திட்டப் பொறுப் பாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மகுடீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடகாவில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.