

மதுரை: மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் வழிப்பறி வழக்கில் கடந்த 2-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல் நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் கார்த்திக் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் புகார் எழுப்பினர். மதுரை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கார்த்திக் உடல் பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கார்த்திக்கின் பிரேதப் பரிசோதனை ஆய்வு அறிக்கை வெளியான நிலையில், ‘கார்த்திக் உடலில் சில காயங்கள், மார்பக பகுதியில் ரத்தம் உறைதல், கை, காலில் சிராய்ப்பு காயம் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.