

புதுடெல்லி: மும்பை விமான நிலையத்தில் ரூ. 4.81 கோடி மதிப்பிலான 8.10 கிலோ தங்கத்தை உடலுறுப்புக்குள் பதுக்கி வைத்து கடத்தமுயன்ற 6 பேரை மும்பை அதிகாரிகள் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த மும்பை சுங்கத்துறை ஆணையர் கூறியதாவது: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளில் ஆறு பேரிடமிருந்து கடந்த ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 7-ம் தேதிகளில் ரூ.4. 81 கோடி மதிப்பிலான 8.10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. தங்களது ஆடைக்குள்ளும், உடலுறுப்புக்குள்ளும் அவர் கள் தங்கத்தைப் பதுக்கி வைத்துக் கடத்தி செல்ல முயன்றனர்.
மோசடியில் ஈடுபட்டவர் களில் ஒருவர் ஒரு தங்கச்சங் கிலி, ஒரு ரோடியம் முலாம் பூசப்பட்ட பதக்கம், ஒரு லாக்கெட் ஆகியவற்றைத் தனது உடலுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்றார். மற்றொருவரின் மலக்குடலுக்குள் முட்டை வடிவிலான ப்சூலில் தங்க மெழுகு எனும் சாதனம் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மோசடியில் ஈடுபட்ட நால்வர் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே கடந்த வாரம் ரூ.2.46 கோடி மதிப்பிலான 4.37 கிலோ தங்கம் கடத்த முயன்ற மூன்று விமான பயணிகளை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்திய தங்கத்தை கைப்பற்றினர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 2.59 கோடி மதிப்பிலான 172.96 கிலோ வெள்ளி நகைகளும், ரூ.22.90 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.