

புதுடெல்லி: பிறந்த பச்சிளம் குழந்தைகள் டெல்லியில் விற்கப்படுவது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறைக்குதகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி கேஷவ்புரத்தில் உள்ள ஒரு வீட்டில்நேற்று சோதனை நடத்தினர். அங்குகடத்தி வைக்கப்பட்டிருந்த 3 பச்சிளம் குழந்தைகளை மீட்டனர்.
மருத்துவமனையில் பிறந்தவுடன் இந்த குழந்தைகளை கடத்தி விற்க திட்டமிட்ட பெண், கடத்தலுக்குத் உதவிய மருத்துவமனை ஊழியர் மற்றும் மேலும் சில பெண்கள் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 7-இல் இருந்து 8 குழந்தைகள் வரை டெல்லியில் விற்றிருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியின் எல்லையைக் கடந்தும் இதுபோன்ற கும்பல் குழந்தைகடத்தலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
ஆகையால், மேலும் பல மாநிலங்களில் உள்ள சந்தேகத்துக்குரிய மகப்பேறு மருத்துவமனைகளில் குற்றவாளிகளுக்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகள் ரூ.5 லட்சம் வரை விற்கப்படுவது தெரிய வந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் கூறினர்.