

ஜெய்சால்மர்: ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது ஸ்ரீகங்காநகர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ரைசிங்நகர் என்ற இடத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ட்ரோன் ஒன்றை பிஎஸ்எப் வீரர்கள் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தினர்.
பின்னர் அந்த ட்ரோனை பரிசோதித்ததில் அதனுடன் 2 பாக்கெட் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த பிஎஸ்எப் உயரதிகாரிகள் மற்றும்போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போதைப்பொருளை பெறுவதற்காக வந்தவர்களை கைது செய்யும் நோக்கத்துடன் அங்கு தேடுதல் மற்றும் சோதனைப் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர்.