கல்லூரி மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ்: பேராசிரியர் சஸ்பெண்ட்

கல்லூரி மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ்: பேராசிரியர் சஸ்பெண்ட்
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக, இணைப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ராமர்(58). இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம், அந்த மாணவி புகார் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மீது பாலியல் ரீதியான புகாரும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தஞ்சாவூர் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தனராஜன் விசாரணை மேற்கொண்டார். அதனடிப்படையில், இணைப் பேராசிரியர் ராமரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in