

மதுரை: துபாயில் இருந்து மதுரை வரும் தனியார் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலையவான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, துபாயில்இருந்து கடந்த 27-ம் தேதி காலை10.30 மணிக்கு மதுரை வந்த தனியார் விமானத்தில் சந்தேகத்துக்கு இடமாக தோற்றம் அளித்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த உமர் பரூக் (38) என்பவரை ஸ்கேன்செய்தபோது, அவரது வயிற்றுக்குள் சிறிய கேப்சூல் வடிவில் தங்கம் இருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அவரை அனுமதித்து, இனிமா கொடுத்து 360 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.24.62 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.