

ராமேசுவரம்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனிகா கவுர் (38). இவர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் விடுதி மேலாளர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தார்.
நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் கோயில் காவல் நிலைய போலீஸார் அறையை திறந்து பார்த்தபோது அந்தப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து போலீ ஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.