

சென்னை: திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலைசெய்யப்பட்ட வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவான்மியூர் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்சரோஜா (90). இவர் வீட்டில் தனியாக வசித்துவந்தார் .
இந்நிலையில் கடந்த 15-ம் தேதிவீட்டின் கதவை சரியாக பூட்டாமல் தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் அவர் வீட்டுக்குள் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதைப் பார்த்துபக்கத்து வீட்டினர், அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிரசிகிச்சைபெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இது தொடர்பாக திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அந்தப் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் அம்பத்தூர் நாராயணா நகரைச் சேர்ந்தபிரேம்குமார் (27) என்பவர் மதுபோதையில், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வீட்டுக்கு செல்வதற்கு பதில், தவறுதலாகசரோஜா வீட்டுக்குள் சென்றதும், அப்போது சரோஜா பிரேம்குமாரை கண்டித்ததும், இதில் ஏற்பட்ட தகராறில் பிரேம்குமார்சரோஜாவை தாக்கிவிட்டு தப்பியோடியிருப்பதும் தெரியவந் தது. இதையடுத்து போலீஸார்,அவரை நேற்று கைது செய்தனர்.