

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் சூரத்கர் ராணுவ கன்டோன்மென்ட் பகுதிக்கு வெளியில் ஆனந்த் ராஜ் சிங் (22) என்ற இளைஞர் ராணுவ சீருடை கடை நடத்தி வந்தார். இவர் முக்கிய ராணுவ தகவல்களை திரட்டி பாகிஸ்தானிய பெண் உளவாளிகளுக்கு அளித்து பணமும் பெற்றுள்ளார்.
சிறிது காலத்துக்கு முன் அவர்கடையை மூடிவிட்டு பெஹ்ரோர்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அப்போதும் அவர் பாகிஸ்தானிய பெண் உளவாளிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றத்துக்காக அவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இத் தகவலை கூடுதல் டிஜிபி சஞ்சய் அகர்வால் கூறினார்.