

சென்னை: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக சென்னை போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த 6-ம் தேதியில் இருந்து 11-ம் தேதி வரையிலான 6 நாட்களில் போதைப் பொருள் விற்றதாக 29 வழக்குகள் பதியப்பட்டு, 55 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 63 கிலோ கஞ்சா, 60 கிராம் போதைப் பொருள், 1752 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.