

செங்கல்பட்டு: வண்டலூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றங்களில் சரணடைந்த 9 பேரை, ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தாம்பரத்தை அடுத்த வண்டலூரைச் சேர்ந்தவர் ஆராமுதன் (56). திமுக பிரமுகரான இவரை கடந்த மாதம் வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள படப்பை செல்லும் பிரதான சாலையில் மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பினர். இதுவரை நீதிமன்றத்தில் சிறுவன் உட்பட 9 பேர் சரணடைந்துள்ளனர்.
நீதிமன்ற காவலில் உள்ள 9 பேரில் சிறுவனை தவிர்த்து 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஓட்டேரி காவல் துறை சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று (மார்ச் 11-ம் தேதி)முதல் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து,8 பேரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசா ரணை முடிந்து மார்ச் 15-ம் தேதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.