வடமாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் 8 பேர் கைது @ கிருஷ்ணகிரி

வடமாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் 8 பேர் கைது @ கிருஷ்ணகிரி
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் வடமாநில தொழிலாளர்கள் 5 பேரை குழந்தைகளை கடத்தும் கும்பல் என நினைத்து கிராம மக்கள் தாக்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி நகர போலீஸார், 5 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மேலும், இதுதொடர்பாக பொதுமக்கள் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குழந்தைகளை கடத்துவதாக தவறான செய்திகளை கேட்டறிந்து வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும், சமூக வலைதளத்தில் தவறான தகவலை பகிர்வோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சந்தேகப்படும்படி யான நபர்களின் நடமாட்டம் தெரிய வந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை உதவி எண் 100 அல்லது 94981 81214, 94981 01090 ஆகிய செல்போன் எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in